"வேட்டைக்கு கிளம்பிய சிங்கங்கள்" - சிஎஸ்கே ட்வீட்
ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி இன்று யுஏஇ-ன் அபுதாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இந்த முறை மும்பைக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்கள் வெற்றிப்பயணத்தை தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறது.
போட்டி தொடங்க இன்னும் 2 மணி நேரங்களே இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அபுதாபி மைதானத்திற்கு புறப்பட்டுவிட்டனர். அவர்கள் செல்லும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், தோனி ராணுவ உடை பாணியில் முகக்கவசம் அணிந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து டுபிளசிஸ், ஜடேஜா மற்றும் லிங்கி நிகிடி ஆகியோர் செல்கின்றனர். ஆஸ்திரெலிய வீரர் ஹஸ்ல்வுட் மற்றும் இங்கிலாந்து வீரர் சாம் குரான் ஆகியோர் உள்ளனர். அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்துள்ளனர்.