கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க புதுவகை மெத்தையை பயன்படுத்தும் லியோனல் மெஸ்ஸி?

கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க புதுவகை மெத்தையை பயன்படுத்தும் லியோனல் மெஸ்ஸி?
கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க புதுவகை மெத்தையை பயன்படுத்தும் லியோனல் மெஸ்ஸி?

பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான லியோனல் மெஸ்ஸி கொரோனாத் தொற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நானோ தொழிட்நுட்பம் புகுத்தப்பட்ட மெத்தையில் தூங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.


33 வயது நிரம்பிய பார்சிலோனா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியும் அவரது குடும்பமும் கொரோனாத் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நானோ தொழிட் நுட்பம் புகுத்தப்பட்ட மெத்தையில் தூங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த மெத்தையை கால்பந்து வீரர் சவுல் நிகுவேஸு தூதராக இருக்கும் நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், இந்த நிறுவனம் அர்ஜென்டீனா வீரர்களுக்கான பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

900 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 88,000 ரூபாய் மதிப்புடைய இந்த மெத்தையில் “விருக்ளின்” என்ற தொழிட்பம் புகுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொழிட்நுட்பத்தில் புகுத்தப்பட்டுள்ள நானோ துகள்கள் மெத்தையில் படுக்கும் ஒருவரின் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை 4 மணி நேரத்தில் நீக்கி விடுவதாகவும்  சொல்லப்படுகிறது. இது மட்டுமல்ல மாடல்களுக்கு தகுந்த வாறு இதில் கால் மசாஜ் செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளதாம்.

6 முறை பாலன் டி'ஓர் விருதைப் பெற்றுள்ள லியோனல் மெஸ்ஸி  அர்ஜென்டீனா நாட்டு கொரோனா நிவாரண நிதிக்காக 440,000 டாலர் கொடுத்திருப்பதும், சம்பளக் குறைப்பு நடவடிக்கைக்கு ஒத்திசைவு கொள்வதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com