மருத்துவமனையில் சிறுவர்களை சந்தித்த மெஸ்சி

மருத்துவமனையில் சிறுவர்களை சந்தித்த மெஸ்சி

மருத்துவமனையில் சிறுவர்களை சந்தித்த மெஸ்சி
Published on

பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கினார். 

பார்சிலோனா கால்பந்து அணியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு ஸ்பெயினில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனைக்குச் சென்று சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை பார்சிலோனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு மெஸ்சி பரிசுகள் வழங்கினார். அந்த அணியின் மற்றொரு முன்னணி வீரரான சுவாரஸ்-யும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com