மெஸ்ஸியின் 76 ஆவது சர்வதேச கோல்: ஈக்குவாடரை வீழ்த்திய அர்ஜென்டினா

மெஸ்ஸியின் 76 ஆவது சர்வதேச கோல்: ஈக்குவாடரை வீழ்த்திய அர்ஜென்டினா

மெஸ்ஸியின் 76 ஆவது சர்வதேச கோல்: ஈக்குவாடரை வீழ்த்திய அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரில் இன்று காலை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஈக்குவாடாரை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது அர்ஜென்டினா.

12 நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இப்போது இந்தத் தொடரில் லீக் போட்டிகள் முடிந்து காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இன்று அதிகாலை நடைபெற்றப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஈக்குவாடார் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதியில் இருந்தே அர்ஜென்டினா வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். பெரும்பான்மையான நேரங்களில் பந்து அர்ஜென்டினா வீரர்களின் வசமே இருந்தது. அப்போது ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ரோட்ரிஜோ பால் முதல் கோலை அடித்தார்.

இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க முடியாத ஈக்குவாடார் அணியினர் தடுப்பாட்ட முறையையே கையாண்டனர். ஆனாலும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 84 ஆவது நிமிடத்தில் மார்டினஸ் அர்ஜென்டினா அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்தார். கோல் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி இரண்டாவது பாதி முழுவதும் கோல் அடிக்கவில்லை. ஆனால் 90 ஆவது நிமிடத்துக்கு பின்பான கூடுதல் நேர ஆட்டத்தில் ஈக்குவாடார் அணி வீரர்கள் தவறு செய்தனர்.

கோல் வீடியோ https://twitter.com/LeoCuccittini_/status/1411519681106690051?s=20

இதனால் அர்ஜென்டினா அணிக்கு "ப்ரீ கிக்" வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திக்தொண்ட மெஸ்ஸி அசத்தலான கோலை பார்சல் செய்தார். இதனையடுத்து சர்வதேச கால்பந்தாட்டத்தில் தன்னுடைய 76 ஆவது கோலை பதிவு செய்தார் மெஸ்ஸி. மேலும் அர்ஜென்டினா அணியும் கோபா அமெரிக்கா தொடரின் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. அர்ஜென்டினா தன்னுடைய அரையிறுதியில் கொலம்பியாவை சந்திக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com