ஐ.பி.எல் தொடரில் லியோனல் மெஸ்ஸி? 

ஐ.பி.எல் தொடரில் லியோனல் மெஸ்ஸி? 
ஐ.பி.எல் தொடரில் லியோனல் மெஸ்ஸி? 

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்று பார்சிலோனா. அந்த அணியோடு 13 வயதிலிருந்தே விளையாடி வருகிறார் கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி. 

இந்நிலையில் மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இருப்பினும் பார்சிலோனா அணியோடு அவர் ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தத்தினால் அவரது முடிவுக்கு சட்ட ரீதியாக சிக்கல்கள் வரலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பார்சிலோனா அணியிலிருந்து விலகியுள்ள மெஸ்ஸி விரைவில் வேறொரு கால்பந்தாட்ட கிளப் அணியோடு இணைவார் என்ற எதிர்பார்ப்பு புட்பால் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ள சூழலில் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி மெஸ்ஸியை கொல்கொத்தா அணியின் ஜெர்சியில் மார்ப் செய்து ‘ஊதா மற்றும் தங்க நிற ஜெர்சியில் கலக்க தயாரா?’ என்ற கேப்ஷன் போட்டு மெஸ்ஸியை டேக் செய்துள்ளது.

அதே நேரத்தில் கொல்கொத்தா அணிக்கு  போட்டியாக இந்திய சூப்பர் லீக் கால்பந்து  தொடரின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மெஸ்ஸியை தங்கள் அணியில் சேர்க்க போட்டா போட்டி வருகிறது.

மற்றொரு ஐ.பி.எல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெஸ்ஸியை தங்கள் அணியில் சேர்க்கவில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.     

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com