2 குழந்தைகளை பெற்ற பிறகு மெஸ்சி திருமணம்

2 குழந்தைகளை பெற்ற பிறகு மெஸ்சி திருமணம்

2 குழந்தைகளை பெற்ற பிறகு மெஸ்சி திருமணம்
Published on

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்சி திருமணம் நேற்று நடந்தது.

அர்ஜென்டினா நாட்டு கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனெல் மெஸ்ஸியும், அவரது தோழி ஆண்டோனெல்லாவும் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தியாகோ, மேடியோ என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது காதல் மனைவியை முறைப்படி திருமணம் செய்ய விரும்பிய மெஸ்சி, அவரது சொந்த ஊரான ரொசாரியோவில், தனது தோழியான ஆண்டோனெல்லாவை தனது இரு மகன்கள் முன்னிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டார். இதில், கால்பந்து வீரர்கள், பிரபலங்கள் என 250 பேர் கலந்து கொண்டனர். சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com