தோல்வியால் கண்கலங்கிய நெய்மர் - கட்டித் தழுவி ஆறுதல் சொன்ன மெஸ்ஸி

தோல்வியால் கண்கலங்கிய நெய்மர் - கட்டித் தழுவி ஆறுதல் சொன்ன மெஸ்ஸி
தோல்வியால் கண்கலங்கிய நெய்மர் - கட்டித் தழுவி ஆறுதல் சொன்ன மெஸ்ஸி

பிரேசில் வீரர் நெய்மரை அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி ஆரத் தழுவி தேற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிரேசிலில் உலக புகழ்பெற்ற மரக்காணா அரங்கில் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 1 - 0  என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. 

28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாட்டத்திலும் ஆரவாரத்திலும் ஈடுபட்டனர்.  மறுபக்கம் பிரேசில் வீரர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். பிரேசில் அணி இதுவரை 9 முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்றிருந்தாலும், இந்த முறை கோப்பை கைநழுவியதால், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் களத்தில் மண்டியிட்டு தேம்பி தேம்பி அழுதார்.

 அப்போது மெஸ்ஸி, நெய்மரை நீண்ட நேரம் ஆரத்தழுவி ஆறுதல் சொல்லி தேற்றினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக மெஸ்ஸி கோப்பையை பெற்றதும் கண் கலங்கும் காட்சி பலரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களையும் அலங்கரித்து இருந்தது. 

இதனிடையே, கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, வெற்றிப் பதக்கத்துடன் குடும்பத்துடன் பேசும் நெகிழ்ச்சியான வீடியோ வெளியாகியுள்ளது. 34 வயதான மெஸ்ஸி, 28 ஆண்டுகளுக்காக அர்ஜென்டினா அணிக்காக விளையாடி இருந்தாலும், எந்த சர்வதேச கோப்பையையும் வென்றதில்லை.

ஆறு முறை சர்வதேச கால்பந்து வீரர் விருதை வென்ற மெஸ்ஸியின் கனவு, கோபா அமெரிக்கா இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தியதன் மூலம் நிறைவேறியுள்ளது. போட்டிக்கு பின், தான் அணிந்திருந்த பதக்கத்தை காட்டி, குடும்பத்தினருடன், காணொலியில் குழந்தைதனமாக அவர் பேசிய வீடியோ, பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com