இக்கட்டான சூழ்நிலையில் விளையாடுவதே எனக்கு பிடிக்கும் - ஸ்டீவ் ஸ்மித்

இக்கட்டான சூழ்நிலையில் விளையாடுவதே எனக்கு பிடிக்கும் - ஸ்டீவ் ஸ்மித்
இக்கட்டான சூழ்நிலையில் விளையாடுவதே எனக்கு பிடிக்கும் - ஸ்டீவ் ஸ்மித்

இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அணியை மீட்கும் வீரராக நான் இருக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்டீவ் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் 144 (219) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 142 (207) என ரன்கள் குவித்து பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் 92 (161) ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து இவரது தலையில் பட்டதால் இரண்டாவது இன்னிங்ஸில் பங்கேற்கவில்லை. 

அத்துடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் களமிறங்கவில்லை. இதன்பின்னர் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் அசத்தலாக விளையாடி இரட்டை சதம் கடந்து 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் எடுத்தார். நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை பல முறை இக்கட்டான சூழலிருந்து ஸ்மித் மீட்டுள்ளார். 

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இக்கட்டான சூழ்நிலை வரும் போது அணியிலுள்ள அனுபவ வீரர் ஒருவர் சிறப்பாக விளையாடி அணியை மீட்க வேண்டும். நான் ஆஸ்திரேலியாவிற்காக பல போட்டிகளில் விளையாடி உள்ளேன். ஆகவே ஆஸ்திரேலியா அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது நான் சிறப்பாக விளையாடி அணியை மீட்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com