'மெர்சிடிஸ் கார் ரொம்ப மோசம்' - லெவிஸ் ஹாமில்டன் அதிருப்தி

'மெர்சிடிஸ் கார் ரொம்ப மோசம்' - லெவிஸ் ஹாமில்டன் அதிருப்தி
'மெர்சிடிஸ் கார் ரொம்ப மோசம்' -  லெவிஸ் ஹாமில்டன் அதிருப்தி

கனடா கிராண்ட் பிரிக்ஸ் சீசனின் பயிற்சிப் போட்டியில் பின்தங்கி வெளியேறிய லெவிஸ் ஹாமில்டன்,  தான் ஒட்டிய மெர்சிடிஸ் கார் மோசமானதாக இருந்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன், ஃபார்முலா ஒன் டிராக்கின் சாம்பியனாக வலம் வருபவர் ஆவார். இந்நிலையில் அண்மையில் நடந்துமுடிந்த கனடா கிராண்ட் பிரிக்ஸ் சீசனின் பயிற்சிப் போட்டியில் பங்கேற்ற லெவிஸ் ஹாமில்டன், மெர்சிடிஸ் காரை ஓட்டினார். அந்தப் போட்டியில் லெவிஸ் ஹாமில்டன் 8வது மற்றும் 13வது இடத்தைப் பிடித்து பின்தங்கி வெளியேறினார். 7 முறை உலக சாம்பியனான லெவிஸ் ஹாமில்டன் பயிற்சிப் போட்டியோடு வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தடுமாற்றம் குறித்து விளக்கம் தெரிவித்துள்ள லெவிஸ் ஹாமில்டன்,  கனடா கிராண்ட் பிரிக்ஸில் தான் ஓட்டிய மெர்சிடிஸ் கார் மோசமாக இருந்ததாக அதிருப்தி தெரிவித்தார். மெர்சிடிஸ் காரை நாங்கள் பல மாற்றங்கள் செய்தும் பயனில்லை என்றும் என்ன மாற்றம் செய்தாலும் அது மோசமான நிலையிலேயே இருந்தது எனவும் தற்போது அந்த காரை சுவருக்கு வெளியே நிறுத்தியிருக்கிறோம் எனவும் அவர்  காட்டமாக அவர் கூறினார்.

இதையும் படிக்கலாம்: ஜூடோ போட்டியில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம்.. அசத்தும் ராசிபுரம் மாணவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com