இதுமட்டும் தெரிந்தால் போதுமே! நீங்களும் கால்பந்தாட்டத்தை நுணுக்கமாக ரசித்து பார்க்கலாமே!

இதுமட்டும் தெரிந்தால் போதுமே! நீங்களும் கால்பந்தாட்டத்தை நுணுக்கமாக ரசித்து பார்க்கலாமே!
இதுமட்டும் தெரிந்தால் போதுமே! நீங்களும் கால்பந்தாட்டத்தை நுணுக்கமாக ரசித்து பார்க்கலாமே!

ஒரு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தை விட அந்த விளையாட்டின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு பார்க்கும் போது அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த விளையாட்டின் விதிகளை விரிவாக பார்க்கலாம்...

ஒரு திசையில் இருந்து மறு திசைக்கு பந்தை கடத்திச் செல்லும்போது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதி ஆக்ரோஷத்துடன் விளையாடுவர். இதனால் விளையாட்டு வீரர்களுக்கு அதிக காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இரு அணி வீரர்களையும் கட்டுப்படுத்த கால்பந்து விதிகள் கடுயாக உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

வீரர்கள் எதிர் திசையை நோக்கி பந்தை கடத்திச் செல்லும்போது ஒருவரை தாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது ஃபவுல் என்று அழைக்கப்படுகிறது. இதை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1. எச்சரிக்கை!

ஒருவர் மீது ஒருவர் தெரியாமல் செய்வது (அடிப்பது, இடிப்பது, குத்துவது, போன்றவை) இதுபோன்ற செயல்களுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்படும்.

2. மஞ்சள் அட்டை!

தெரிந்தே செய்வது ஆனால், பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இல்லாமல் இருந்தால் இதற்கு மஞ்சை அட்டை காண்பித்து எச்சரிக்கப்படும். இதைநாம் தெரிந்தேதான் செய்கிறோம் ஆனால், இதில் ஆபத்து குறைவாக இருக்கும். ஒரு போட்டியில் வீரர் ஒருவர் மஞ்சள் அட்டை வாங்கிய நிலையில், அடுத்த போட்டியிலும் மஞ்சள் அட்டை வாங்கினால் அதற்கு அடுத்த போட்டியில் அவரால் விளையாட முடியாது.

3.சிவப்பு அட்டை!

ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளும்போது காயம் ஏற்படுவது போல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விளையாடும் வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்படும். இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவதோடு அவர் நேராக மைதானத்தில் உள்ள அறைக்கு அனுப்பப்படுவார்.

சிவப்பு அட்டை வாங்கிய வீரர் ஒருவர் அடுத்து எத்தனை போட்டிகளில் விளையாட முடியாது என்ற முடிவை களத்தில் உள்ள நடுவரே எடுப்பார். இது அந்த போட்டியில் விளையாட்டு வீரர் எந்த அளவிற்கு ஆபத்தான முறையில் விளையாண்டார் என்பதைப் பொறுத்தே இந்த முடிவு எடுக்கப்படும்.

ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு வீரர் சிவப்பு அட்டை வாங்கினார் என்றால் அதற்கு அடுத்த தொடரின் முதல் போட்டில் விளையாடும் வாய்ப்பை அந்த வீரர் இழக்க நேரிடும்.

அசிஸ்டென்ட் ரெப்ரீ

கால்பந்து போட்டியின் முடிவுகளை துள்ளியமாக எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புதிதாக உருவாக்கப்பட்டது தான் வீடியோ அசிஸ்டென்ட் ரெப்ரீ. இதில், மைதானத்தில் ஒரு அறையில் இருக்கும் துணை நடுவர் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்வார். இதில் முக்கியமாக 4 விசயங்களுக்கு மைதானத்தில் நடுவராக செயல்படுபவருடன் தகவலை பரிமாறிக் கொள்வார்.

அதன்படி,

1.விதிமுறை மீறல் இன்றி கோல் சரியாகத்தான் போயிருக்கு என்பதை உறுதி செய்ய.

2.களத்தில் உள்ள நடுவர் பெனல்டி கொடுத்தால் அது சரியாக கொடுக்கப்பட்டதா? பெனல்டி கொடுக்க வேண்டிய நிலையில் கொடுக்கவில்லை என்றால், பெனல்டி கொடுக்கச் சொல்வது.

3.போட்டியில் நடுவர், வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை கொடுக்கிறார் என்றால், அது சரியாக கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதை துல்லியமாக கணிக்க

4.ஆஃப் சைடை துல்லியமாக கணிக்கவும் வீடியோ அசிஸ்டென்ட் ரெப்ரீ முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கால்பந்தில் இத்தனை வகைகளா!

உலகம் முழுவதும் விளையாடும் விளையாட்டு மட்டுமல்ல உலகம் முழுவதம் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டும் கால்பந்து விளையாட்டு என்றால் அது மிகையில்லை. பந்தை கால்களால் உதைத்து எதிர் அணியின் கோல் கம்பத்தின் உள்ளே பந்தை அடிப்பதால் இந்த விளையாட்டு கால்பந்து விளையாட்டு என்றழைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் மூவர், ஐவர், ஏழுவர், ஒன்பது பேர், மற்றும் 11 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகள் நடந்தாலும், ஐவர் மற்றும் 11 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகளை மட்டுமே சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) அங்கீகரித்துள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் 11 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகளே அதிகம் நடத்தப்படுகிறது.

களத்திற்கு உள்ளே, வெளியே எத்தனை வீரர்கள்?

ஒரு திசையில் இருந்து மறு திசைக்கு பந்தை கடத்திச் செல்ல, அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதி ஆக்ரோஷத்துடன் விளையாடும் போது அதிக காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இரு அணி வீரர்களையும் கட்டுப்படுத்த கால்பந்து விதிகள் கடுயாக உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப் படுகின்றன.

சர்வதேச அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் ஒரு அணியில் 3 கோல் கீப்பர் உட்பட மொத்தம் 26 பேர் இடம்பெறுவர். அவர்களின் 11 பேர் களத்தில் விளையாடுவர். இதில், மாற்று ஆட்டக்காரர்களாக 5 பேரை களமிறக்க வாய்ப்புண்டு. இதுதான் ஒரு டீம்.

கோல் கீப்பர்!

இந்த விளையாட்டில் முக்கியமானவர் கோல் கீப்பர். அதாவது எதிர் அணியினர் அடிக்கும் பந்தை கோலாக விடாமல் தடுப்பவர். இவர் மட்டுமே பந்தை கைகளால் அதுவும் கோல் ஏரியாவுக்கு உள்ளே மட்டும் தொட முடியும். மற்றவர்கள் கைகளால் தொட விதியில் இடமில்லை. அவ்வாறு மீறி தொட்டல் ஆட்டம் நிறுத்தப்பட்டு எதிரணிக்கு பந்தை அடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

பின்கள, நடுகள, முன்கள வீரர்கள்!

ஒவ்வொரு அணியிலும் கோல் கீப்பர் தவிர பின்கள வீரர்கள், நடுகள வீரர்கள், மற்றும் முன்கள வீரர்கள் என விளையாடுவார்கள். இவர்களில் யார் வேண்டுமானாலும் எதிர் அணி திசையில் கோல் அடிக்கலாம்.

சேம்சைடு கோல்!

ஒரு அணியின் வீரர் தாங்கள் விளையாடும் திசையிலேயே கோல் அடித்தால் அது சேம்சைடு கோல் என அழைக்கப்படும். அப்படி அடிக்கப்படும் கோலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

நடுவர்கள்!

சர்வதேச அளவில் 45, 45 நிமிடங்கள் இரண்டு பாதியாக கால்பந்து போட்டி நடைபெறும். கால்பந்து போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 11 பேர் இடம்பெறுவர், இவர்களை கட்டுப்படுத்தி கண்காணிக்க களத்தில் ஒரு நடுவர் இருப்பார். இவருக்கு மட்டுமே போட்டியின் அனைத்து முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ளது. இவர் தவிர இரண்டு நடுவர்கள் களத்தின் வெளிப்பகுதியில் செயல்படுவர். இவர்களை தவிர வெளியே இரண்டு துணை நடுவர்கள் செயல்படுவர்.

கூடுதல் நேரம்

ஆட்டம் தொடங்கியது முதல் ஆட்டம் முடியும் வரை அதற்கான நேரம் சரியாக ஒதுக்கப்படும். அதாவது ஒருபாதி 45 நிமிடம் என்றால், வீரருக்கு அடிபடும் போது ஏற்படும் நேர விரையம், மாற்று ஆட்டக்காரர்களை அனுப்பும் போது ஏற்படும் நேர விரையம் அனைத்தையும் கணக்கிட்டு கூடுதல் நேரம் அளிக்கப்படும். உதாரணத்துக்கு 45105 என்பன போன்று கூடுதலான நேரம் வழங்கப்படும்.

ஒரு விளையாட்டின் விதிகளை தெரிந்து கொண்டு அந்த விளையாட்டை பார்க்கும் போது அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். 

கால்பந்து போட்டியை துரிதமாகவும், துல்லியமாகவும் சர்ச்சைகள் இன்றி வெற்றிகரமாக முடிக்கவும் சர்வதேச கால்பந்து சம்மேளனம், புதிய விதிகளை அமல்படுத்தி கால்பந்து விளையாட்டின் தரத்தை மேலும் உயர்த்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com