\
கபில் தேவுக்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி

கபில் தேவுக்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி

கபில் தேவுக்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

61 வயது நிரம்பிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக் செய்யப்படவுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் வேண்டியுள்ளனர்.

இந்திய அணியில் 1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளையாடிய கபில் தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com