விளையாட்டு
அனுபவ வீரரை களமிறக்கவில்லை... லியாண்டர் பயஸ் திடீர் விலகல்
அனுபவ வீரரை களமிறக்கவில்லை... லியாண்டர் பயஸ் திடீர் விலகல்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். இரட்டையர் பிரிவில் தன்னுடன் சேர்ந்து விளையாட அனுபவமுள்ள வீரரை களமிறக்காததால் பயஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இரட்டையர் பிரிவில் போபண்ணா - திவிஜ் சரண் இணைந்து விளையாடவுள்ள நிலையில், சுமித் நாகலுடன் சேர்ந்து விளையாடும்படி அனுபவ வீரர் லியாண்டர் பயஸை இந்திய டென்னிஸ் சம்மேளனம் கேட்டுக்கொண்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து பயஸ் விலகியுள்ளார்.
45 வயதான லியாண்டஸ் பயஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகளில் பங்கேற்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.