தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு?

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு?
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு?

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டிவென்டி-20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் தென்னாப்பிரிக்கா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மூத்த வீரர்களுக்கும் குறைந்தது மூன்றரை வாரங்களுக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாக பிசிசிஐ தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜாஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் நேரடியாக ஜூலையில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முன்னணி வீரர்கள் அனைவரும் துடிப்புடன் களமிறங்க வேண்டும் என்பதால், அடுத்த மாதம் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 7 சர்வதேச டிவென்டி-20 போட்டியில் ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com