“ நமது மகளை கொண்டாடுவோம்”- பி.வி.சிந்துவுக்கு குவிகிறது வாழ்த்து..!

“ நமது மகளை கொண்டாடுவோம்”- பி.வி.சிந்துவுக்கு குவிகிறது வாழ்த்து..!

“ நமது மகளை கொண்டாடுவோம்”- பி.வி.சிந்துவுக்கு குவிகிறது வாழ்த்து..!
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரமாண்டமான வெற்றியைப் பதிவு செய்து பி.வி.சிந்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த சிந்துவின் அர்பணிப்பு மற்றும் மன உறுதி இந்திய பெண்களின் சக்தியை பிரதிபலிக்கிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

சிந்து அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னதாரணமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்த சிந்துவிற்கு வாழ்த்துகள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்துவிற்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், வரும் காலங்களில் பல்வேறு வெற்றிகளைப் பெற வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடின உழைப்பு மட்டுமே இது போன்ற வெற்றிகளுக்கு அடித்தளம் என்பது வரும் தலைமுறைகளுக்கு பாடமானது என தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து புகழின் உச்சத்தில் ஜொலித்திட வேண்டும் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து பதிவிட்டுள்ளார். உலக அளவில் வலிமைக்கும், திறமைக்கும் கிடைத்த உண்மையான வெற்றி; நமது மகளை கொண்டாடுவோம் என கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com