LBW அவுட்! நடுவருடன் கொல்கத்தா வீரர்கள் கடும் வாக்குவாதம் ! களத்தில் நடந்தது என்ன?

LBW அவுட்! நடுவருடன் கொல்கத்தா வீரர்கள் கடும் வாக்குவாதம் ! களத்தில் நடந்தது என்ன?

LBW அவுட்! நடுவருடன் கொல்கத்தா வீரர்கள் கடும் வாக்குவாதம் ! களத்தில் நடந்தது என்ன?

சரியான நேரத்தில் தாங்கள் ரிவியூ கேட்டுவிட்டதாக கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் இருவரும் கூறினர். ஆனால், அங்கு இதுவரை நாம் கவனிக்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்தார் நடுவர்.

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் அழுத்தத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. துவக்கத்தில் சிறப்பாக பேட்டிங்கை துவக்கிய கொல்கத்தா அணி, உம்ரானின் அதிவேகப்பந்துவீச்சில் சிக்கி சீட்டுக்கட்டு போல சரிந்தது. 11 ஓவரிகளிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை எடுத்து ஆடி வந்தது கொல்கத்தா அணி.

சாம் பில்லிங்ஸ் , ரிங்கு சிங் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு தன் வேகப்பந்து வீச்சால் செக் வைத்தார் தமிழக வீரர் நடராஜன். ரிங்கு சிங்கிற்கு அவர் வீசிய பந்து சரியாக பேடில் பட, எல்பிடபுள்யூ கோரி சன்ரைசர்ஸ் வீரர்கள் கூச்சலிட்டனர். சில வினாடிகள் யோசித்துவிட்டு பொறுமையாக தன் விரலை உயர்த்தி அவுட் என அறிவித்தார் நடுவர்.

டிஆர்எஸ் ரிவியூ கோரலாமா என்பது குறித்து பிட்சின் நடுவே வந்து ரிங்கு சிங்கும் பில்லிங்ஸும் பேசிக் கொண்டனர். டிஆர்எஸ் கவுண்டன் டவுன் ஓடிக் கொண்டிருக்க, இறுதி வினாடி நெருங்கும்போது டிஆர்எஸ் ரிவியூ கோரினார் பில்லிங்ஸ். ஆனால் நேரம் முடிந்துவிட்டதாக நடுவர் அனில் குமார் சவுத்ரி அறிவித்ததால் அதிர்ச்சியடைந்த பில்லிங்ஸ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சரியான நேரத்தில் தாங்கள் ரிவியூ கேட்டுவிட்டதாக இருவரும் கூறினர். ஆனால் அங்கு இதுவரை நாம் கவனிக்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்தார் நடுவர்.

டிஆர்எஸ் ரிவியூவை பந்தை எதிர்கொண்ட ஸ்டிரைக்கர் ரிங்கு சிங் தான் கேட்க வேண்டும். ஆனால், மறுமுனையில் இருந்த நான் ஸ்டிரைக்கர் பில்லிங்ஸ் டிஆர்எஸ் கேட்டதால் ரிவியூ தர முடியாது என நடுவர் தெரிவித்துவிட்டார். ஆனால் ரிவியூ மறுக்கப்பட்டது கொல்கத்தாவுக்கு பாதகமில்லை. ஏனென்றால் நடராஜன் வீசிய சிறந்த யார்க்கர் பந்து மிடில் ஸ்டம்பின் அடிப்பகுதியை உடைத்திருக்கும். எனவே ரிவியூ கேட்டிருந்தாலும் ரிங்கு சிங் அவுட் என்றே அறிவிக்கப்பட்டு இருப்பார். ஒரு டிஆர்எஸ் ரிவியூவை கொல்கத்தா இழந்திருக்கும்!

இந்த நிகழ்வால் மைதானத்தின் நடுப்பகுதி சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. நடுவர்களுடன் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வாக்குவாதம் செய்வதை கண்டு ஹைதாராபாத் வீரர்களும் அங்கு சூழ்ந்துவிட்டது. கேப்டன் கேன் வில்லியம்சனும் அருகே வந்து கொல்கத்தா வீரர்களிடம் பேசினார். நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து வைத்தே ரிங்கு சிங்கை நடுவர்கள் அனுப்பி வைத்தனர். 

இது நடந்து கொண்டிருந்த போதே கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளரான மெக்கல்லம் மிகவும் ஆவேசப்பட்டு நான்வது நடுவரிடம் முறையிட்டார். இதனால், அந்த சில நிமிடங்கள் மைதானம் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com