சட்டப்பூர்வமாக்கப்படுமா சூதாட்டங்கள்? – பின்னணி என்ன? பரிந்துரைகள் என்னென்ன?

சட்டப்பூர்வமாக்கப்படுமா சூதாட்டங்கள்? – பின்னணி என்ன? பரிந்துரைகள் என்னென்ன?

சட்டப்பூர்வமாக்கப்படுமா சூதாட்டங்கள்? – பின்னணி என்ன? பரிந்துரைகள் என்னென்ன?
Published on

பந்தயம், சூதாட்டம் ஆகியவை அனைத்து விளையாட்டுகள் மேலும் நடக்கின்றன. யார் வெல்வார்? யார் தோற்பார்? – என இருவர் தங்களுக்குள் பந்தயம் வைப்பதை சட்டத்தின் மூலம் தடுப்பது எளிதல்ல. இவை தவிர சூதாட்ட மையங்கள், சூதாட்ட இணையதளங்கள் மூலமாகவும் சூதாட்டங்கள் நடக்கின்றன. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் சூதாட்டங்களுக்கு சட்ட அனுமதிகள் உள்ளன. இந்தியாவில் சீட்டாட்டம் உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு குறிப்பிட்ட இடங்களைத் தவிர அனுமதி இல்லாத நிலையில், இந்த சூதாட்டங்களில் புழங்கும் பணம் அப்படியே கறுப்புப் பணமாக மாறுகின்றது.

இந்தியாவின் கோவா, தாமன், சிக்கிம் போன்ற சில பகுதிகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஏன் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கக் கூடாது என்ற கேள்வி நெடுங்காலமாக உள்ளது. ஆனால் சூதாட்டத் தரகர்கள் விளையாட்டுகளில் ஆதிக்கம் செலுத்தி, தங்களுக்கு ஏற்ப அதன் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கலாம், மக்கள் பாதிக்கப்படலாம் – என்பவை உள்ளிட்ட அச்சங்களால் சூதாட்டங்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்தையொட்டி நடந்த சூதாட்டங்களில் 3 லட்சம் கோடி அளவுக்குப் பணம் புழங்கியதாக எஃப்.ஐ.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆலோசிக்குமாறு சட்ட கமிஷனிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பிஎஸ் சவுஹான் தலைமையிலான அந்த சட்டஆணையம் தற்போது மத்திய அரசுக்குத் தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில்,

  1. இந்தியாவில் மகாபாரத காலம் தொட்டே சூதாட்டங்கள் இருக்கின்றன. தடை செய்தாலும் அவை வெளியில் தெரியாமல் தொடர்கின்றன.
  2. சட்டத்தின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்ட சூதாட்டங்களை மாநில அரசு அனுமதிக்கலாம்
  3. சூதாட்டங்களில் பணமில்லா பரிவர்தனையை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கலாம்.
  4. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஆதார் எண், நிரந்தர கணக்கு எண் ஆகியவற்றை பெற வேண்டும்.
  5. தனி நபருக்கான குறிப்பிட்ட காலத்திற்கு, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சூதாட்ட பரிவர்தனைகளை செய்ய அனுமதிக்கலாம். உதாரணமாக காலாண்டுக்கு இவ்வளவு, அரையாண்டுக்கு இவ்வளவு எனப் பிரிக்கலாம்.
  6. சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயிக்கலாம்.
  7. காசினோ, ஆன்லைன் விளையாட்டு துறையில் முதலீடு செய்ய அந்நிய செலாவணி, அந்நிய நேரடி முதலீடு சட்டங்களை கொண்டு வரவரலாம்
    இதனால் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும், வேலை வாய்ப்புகள் கூடும்.
  8. ஆனால், சூதாட்டத்தில் உள்ள ஆபத்து குறித்தும், விளையாட்டின் விதிமுறைகள் குறித்தும் இணையதளத்தில் தெளிவாக பதிவிட வலியுறுத்த வேண்டும்.
  9. இணையதளத்தில் செய்யப்படும் சூதாட்ட விளம்பரங்களில் தடைசெய்யப்பட்ட ஆபாச பயன்பாடு அனுமதிக்க கூடாது
  10. சூதாட்டங்களை சரியான சூதாட்டம், சிறிய சூதாட்டம் என இரண்டாக  வகைப்படுத்தி சரியான சூதாட்டத்தை உயர் வருவாய் பிரிவினருக்கும், சிறிய சூதாட்டத்தைக் வருவாய் குறைவான பிரிவினருக்கும் பரிந்துரைக்கலாம் - என தெரிவித்தது.

இந்தப் பரிந்துரைகளுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சட்ட ஆணையத்தின் உறுப்பினரான சிவக்குமார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ’பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்’ என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com