லதா மங்கேஷ்கர் நினைவாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா

லதா மங்கேஷ்கர் நினைவாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா
லதா மங்கேஷ்கர் நினைவாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா

‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என போற்றப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு விளையாடி வருகிறது. 

92 வயதான லதா மங்கேஷ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர விசிறி. 1983-இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வெகுமதி வழங்கும் நோக்கில் டெல்லியில் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் நிதி திரட்டி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கவாஸ்கர், டெண்டுல்கர், கங்குலி, தோனி என பல இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் பசுமையான பொழுதை செலவிட்டுள்ளார் லதா மங்கேஷ்கர். அவரது நினைவாக வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து கொண்டுள்ளதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com