இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஜடேஜாவுக்கு பதில் அக்ஷர் படேல்
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக டுவெண்டி டுவெண்ட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். நடத்தை விதியை மீறியதாகக் கூறி ஜடேஜாவுக்கு ஒரு போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்தது. இதையடுத்து அவருக்குப் பதில், இளம் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி உடனான, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பல்லேகேலவில் வரும் 12ஆம் தேதி தொடங்க உள்ளது.