தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி! நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பவுலிங்!

தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி! நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பவுலிங்!
தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி! நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பவுலிங்!

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. டி20 தொடரை இந்தியா வெல்ல போகிறதா இல்லை நியூசிலாந்து அணி சமன் செய்ய போகிறதா என்ற தொடரின் முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நேப்பியர் மைதானத்தில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனிற்கு ஓய்வளிக்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்திக்கு வழங்கப்பட்டது. மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வுசெய்தார்.

டாஸ்ஸிற்கு பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி, கடந்த போட்டிகளில் இந்த மைதானத்தில் பேட்டிங்கிற்கு சாதகமான போட்டிகளாகவே இருந்துள்ளன. முந்தைய போட்டியில் எங்களுடைய பவுலிங்க் நினைத்தபடி அமையவில்லை என்றாலும், முழு கிரிடிட்டும் சூரியகுமார் யாதவிற்கே சேரும். வில்லியம்சனிற்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் எடுக்கப்பட்டுள்ளார் என்றார்.

இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் பந்துவீச்சிற்கு சிரமம் இருக்கலாம், இருப்பினும் எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். வாசிங்க்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்சல் பட்டேல் இணைக்கப்பட்டுள்ளார் என்றார்.

இந்நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com