ஐபிஎல் 2020 : மும்பை அணியிலிருந்து விலகினார் மலிங்கா

ஐபிஎல் 2020 : மும்பை அணியிலிருந்து விலகினார் மலிங்கா

ஐபிஎல் 2020 : மும்பை அணியிலிருந்து விலகினார் மலிங்கா
Published on

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்கா விளையாடமாட்டார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கையை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா முன்னணி பந்துவீச்சாளராக திழ்கிறார். இவர் நடப்பு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களால் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் அவர் இருக்கப்போவதாகவும் தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

மும்பையின் இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களின் பல போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு மலிங்கா முக்கிய காரணமாக அமைந்தவர். இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 170 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். அவர் வீசும் யார்க்கர் பந்துகளை முன்னணி பேட்ஸ்மேன்களே எதிர்கொள்வது கடினமாகும். இந்த தொடரில் அவர் இல்லை என்பது மும்பை அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா தற்காலிகமாக விலகியிருக்கிறார். அத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக, அதே அணியைச் சேர்ந்த ஆதம் ஸம்பா இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com