கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை
கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை

பாலியல் வன்கொடுமை புகாரில் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் டிஎன்ஏவை பரிசோதிக்க அமெரிக்கா காவல்துறை முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பின் மாட்ரிட் அணியிலிருந்து விலகி, இத்தாலியின் பிரபலாமான கிளப்பான ஜூவாண்டஸ் அணியில் இணைந்தார். ஜூவாண்டஸ் அணி, அவரை சுமார் 100 மில்லியனுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரையில், 4 கோல்டன் ஷூக்களை வென்றுள்ளார். இதுவரையில் எந்தக் கால்பந்து வீரரும் அத்தனை கோல்டன் ஷூக்கள் வென்றதில்லை.

இந்தச் சுழலில் இந்தக் கால்பந்து ஹீரோ மீது காத்ரின் மயோர்கா என்ற 34 வயது பெண் பாலியல் புகார் கூறினார். 2009 ஆம் ஆண்டு லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஓட்டல் அறை ஒன்றில் ரொனால்டோ என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுபற்றி வெளியே வாயைத் திறக்காமல் இருக்க எனக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலரையும் அவர் கொடுத்தார் என்று புகார் கூறினார்.

இந்தப் புகார் பரபரப்பைக் கிளப்பியது. அதில் எந்த உண்மையும் இல்லை என ரொனால்டோ மறுத்து இருந்தார். இதனைத்தொடர்ந்து பாலியல் புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேத்ரினின் ஆடையில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும், ரொனால்டோவின் டிஎன்ஏவும் ஒத்து போகிறதா என்பதை ஆய்வு செய்ய அமெரிக்கா காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரொனால்டோவின் டிஎன்ஏவை அமெரிக்கா காவல்துறை கேட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com