அர்ஜென்டினாவின் கனவை தவிடுபொடியாக்கிய இளம் வீரர்

அர்ஜென்டினாவின் கனவை தவிடுபொடியாக்கிய இளம் வீரர்

அர்ஜென்டினாவின் கனவை தவிடுபொடியாக்கிய இளம் வீரர்
Published on

அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற பிரான்ஸ் அணியின் இளம் வீரர் மபாப்பி அடித்த இரண்டு கோல் முக்கிய காரணமாக அமைந்தது. 

எப்படியோ லீக் போட்டியை கடந்து நாக் அவுட் சுற்றுக்கு வந்த அர்ஜென்டினா அணி, எப்படியும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும் என்று அதன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள். மெஸ்சியின் கோலை காணவும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் இன்று காத்திருந்தார்கள். ஆனால், எல்லாமே பொய்த்துப் போய்விட்டது. மெஸ்சியும் கோல் அடிக்கவில்லை, அர்ஜென்டினாவும் வெற்றி பெறவில்லை. 

முதல் பாதி வரை கூட 1-1 கோல் கணக்கில் போட்டி சமனில் தான் இருந்தது. இரண்டாவது பாதியில் எப்படியும் மெஸ்சி மேஜிக் செய்து கோல் அடிப்பார், தனது அணியை வெற்றி பெற செய்வார் என்று ரசிகர்களின் இதயங்கள் துடித்துக் கொண்டிருந்தன. அதுவும் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அர்ஜென்டினா அணியின் காப்ரிய்ல் மர்கோடா கோல் அடித்து 2-1 என்று தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். அப்போது அர்ஜென்டினா வீரர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். ஆனால், அர்ஜென்டினா ரசிகர்களின் அந்த சந்தோசம் சற்று நேரம் கூட நீடிக்கவில்லை. 

அர்ஜென்டினா, மெஸ்சியின் ரசிகர்களுக்கு இடியாய் அமைந்தது பிரான்ஸ் அணியின் 19 வயதே ஆன இளம் வீரர் மபாப்பி அடித்த அந்த இரண்டு கோல்கள் தான். மிகவும் டெக்னிகலான ஷாட் என்று கூட சொல்ல முடியாது. அவ்வளவு எளிதில் அர்ஜென்டினா வீரர்களை ஏமாற்றி இரண்டு கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்திவிட்டார் மபாப்பி. அர்ஜென்டினா அணியின் தோல்விக்கு இந்த கோல்களே முக்கிய காரணம். 

இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அணியின் தடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அந்த அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்திருந்தால் இத்தனை கோல்களை பிரான்ஸ் அணியால் அடித்திருக்க முடியாது. மபாப்பியின் அசத்தலான கோல்களால் 4-3 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதல் அணியாக பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அர்ஜென்டினா அணி தொடரில் இருந்து நடையைக் கட்டியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com