விளையாட்டு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி - டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி - டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 46வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங் தேர்வு. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளும் வெற்றியை குறிவைத்து விளையாடுகின்றன.
கொல்கத்தா இதில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
பேட்டிங்கில் பலம் கொண்ட பஞ்சாப்பும், பவுலிங்கில் பலம் கொண்ட கொல்கத்தாவும் முட்டி மோதி வருகின்றன.
பஞ்சாப் அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.