\
ஐபிஎல் தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்

ஐபிஎல் தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்

ஐபிஎல் தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்
Published on

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு அதிக தொகையில்(8.4 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டவர் வருண் சக்ரவர்த்தி. இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இவர் வலது கை சுழற்பந்துவீச்சாளர். இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் அசத்தியதால் ஐபிஎல் அணிக்கு தேர்வாகினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் வருண் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 35 ரன்கள் விட்டுகொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணி சென்னையில் விளையாடிவந்த போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியில் காயம் அடைந்தார். அதன்பிறகு இவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் தற்போது வருண் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அணி, “வருண் காயம் குணமடைந்து எங்களின் கடைசி கட்ட லீக் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரின் காயம் சரியாகவில்லை. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் குணமடைய பஞ்சாப் அணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com