விளையாட்டு
கும்ப்ளே செய்தது சரிதான்: சொல்கிறார் அசாருதீன்
கும்ப்ளே செய்தது சரிதான்: சொல்கிறார் அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியது சரியான முடிவுதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறினார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக 2016ம் ஆண்டு ஜூன் 23ல் அனில் கும்ப்ளே ஒப்பந்தம் செய்யப்பட்டார். கேப்டன் விராத் கோலியுடனான கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார்.
இந்நிலையில் இதுபற்றி முகமது அசாரூதின் கூறும்போது, ’அனில் கும்ப்ளே விலகியது வருத்தமானதுதான். அவருக்கு இதுபோன்ற பிரச்னை வந்திருக்கக் கூடாது. சுயமரியாதையை இழந்து அந்தப் பதவியில் தொடர்வதற்குப் பதிலாக விலகிவிடலாம் என அவர் நினைத்திருக்கலாம். அவர் எடுத்த முடிவு சரியானதுதான் என நினைக்கிறேன். நான் ஆடும்போது இருந்த இந்திய அணிக்கும் இப்போதைய அணிக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அதனால் அதை ஒப்பிட முடியாது’ என்றார்.