பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை பயிற்சியாளர் பதவியில் நீடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தநிலையில், பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே பதவி விலகியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியுடன், அனில் கும்ப்ளேவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. லண்டனில் நடைபெறும் ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக செல்லும் இந்திய அணியுடன் அனில் கும்ப்ளே செல்லவில்லை என்றும், கூட்டத்தொடர் முடிந்த பின்னர் அணியுடன் அவர் இணைந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், அனில் கும்ப்ளே இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால், இந்திய கிரிக்கெட் அணியில் மற்றுமொரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.