நியூசி. டெஸ்ட்: சவுதி வேகத்தில் சுருண்டது இலங்கை
நியூசிலாந்து வீரர் டிம் சவுதியும் அபார பந்துவீச்சால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் (83 ரன்), கருணாரத்னே (79 ரன்), டிக்வெல்லா (73 ரன்) எடுத்தனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை, 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணியின் மேலும் 7 ரன் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன் எடுத்துள்ளது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 6 விக்கெட்டுகளை அள்ளினார். வாக்னர் 2 விக்கெட்டுகளையும் கிராண்ட் ஹோம், போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து நியூலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராவலும் லாதமும் களமிறங்கிறனர். இருவரும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ராவல் 43 ரன் எடுத்த நிலையும் லஹிரு குமரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து ஆடி வருகிறது. லாதம் 50 ரன்னுடனும் கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.