மாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்

மாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்
மாயம் செய்த ‘குல்தீப்’ - மறுபடியும் ‘மரண ஃபார்மில்’ சைனா மேன்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் மீண்டும் ஃபாமிற்கு வந்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், சர்வதேச பேட்ஸ்மேன்களை கடந்த ஒன்றரை வருடமாக மிரட்டி வருகிறார். இவரது பந்தை எதிர்கொள்ளும் போது, எப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களும் திணறிப்போகின்றனர். ஆனால் சர்வதேச போட்டிகளில் ஜொலித்த குல்தீப் யாதவ், ஏனோ..! ஐபிஎல் போட்டிகளில் பிரகாசிக்கவில்லை. அவரது சுழற்பந்து அங்கே பந்தாடப்பட்டது. ஆனாலும் ஐபிஎல் போட்டியைப் போன்று சர்வதேச போட்டியில் குல்தீப்பின் பந்தை அடிக்க இயலாது என அப்போதே கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தனர்.

அவர்களின் கணிப்பை குல்தீப் தப்போது பூர்த்தி செய்துள்ளார். உலகக் கோப்பை தொடங்கியது முதலே அவரது பந்துவீச்சு தெளிவாக இருந்தது. இந்தியாவின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 10 ஓவர்கள் பந்துவீசிய குல்தீப் 46 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை. இதனால் குல்தீப் பழைய ஃபாமிற்கு வருவாரா ? என்ற கேள்விகள் எழுந்தன. 

இந்நிலையில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஸ்பின்னை குல்தீப் நிரூபித்துள்ளார். அதுவும் அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகளுமே மிக முக்கிய வீரர்களான ஃபாகர் 62 (75) மற்றும் பாபர் அசாம் 48 (57) ஆகியோரின் விக்கெட்டுகள் ஆகும். 9 ஓவர்கள் பந்துவீசிய குல்தீப் 32 ரன்களை மட்டுமே கொடுத்தார். நேற்றை போட்டியில் 2.4 ஓவர்கள் மட்டுமே வீசிய புவனேஸ்வர் குமாரை தவிர்த்துவிட்டு பார்த்தால், குறைந்த ரன்கள் கொடுத்த வீரர் குல்தீப் தான். 

இதற்கிடையே குல்தீப்பின் பந்துவீச்சு குறித்து பேசிய ரோகித் ஷர்மா, “குல்தீப் பந்துவீசும்போது அனைவருக்குள்ளும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதனால் அவரிடம் அணியினர் அனைவரும் அடிக்கடி பேசுகிறோம். கடந்த ஆண்டு அணிக்கு பல வெற்றிகளை அவர் பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவர் ஒரு சாதனை ஸ்பின்னராக திகழ்கிறார். மிடில் ஆர்டரில் அவரது பந்துவீச்சு வெற்றியை பெற்றுக்கொடுப்பவையாக உள்ளன. பாகிஸ்தானுடனான போட்டியில் அவர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதை நீங்களே பார்த்துவிட்டீர்கள்” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com