சுழலில் அசத்திய குல்தீப் யாதவ்.. 8 விக்கெட்டை இழந்து பாலோ-ஆன் தவிர்க்க போராடும் வங்கதேசம்!

சுழலில் அசத்திய குல்தீப் யாதவ்.. 8 விக்கெட்டை இழந்து பாலோ-ஆன் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
சுழலில் அசத்திய குல்தீப் யாதவ்.. 8 விக்கெட்டை இழந்து பாலோ-ஆன் தவிர்க்க போராடும் வங்கதேசம்!

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கிடையேயான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்துள்ளது வங்கதேச அணி.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று புதன் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸ் முடிவில் புஜாரா (90 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (86 ரன்கள்) மற்றும் அஸ்வின் (58 ரன்கள்) உதவியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்களை குவித்தது இந்திய அணி.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தனர்.

சுழலில் கலக்கிய குல்தீப் யாதவ்!

56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்டர்களை வெளியேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். வங்கதேச அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்டர்களாக பார்க்கப்படும் முஸ்பிகுர் ரஹிம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் இருவரது விக்கெட்டையும் அடுத்தடுத்த வீழ்த்தி முழுமையாக வங்கதேச அணியை பின்னுக்கு தள்ளினார் குல்தீப். அடுத்தடுத்து வந்த நூருல் ஹாசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் விக்கெட்டுகளையும் குல்தீப் கைப்பற்ற, 102 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி.

பின்னர் விரைவாகவே வங்கதேசம் ஆல் அவுட்டாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியாக கைக்கோர்த்த மெஹிதி ஹாசன் மற்றும் எபதாத் ஹொசைன் இருவரும் வங்கதேச அணியை ஃபால்லோவ்-ஆன் செய்வதை தவிர்ப்பதற்காக போராடி வருகின்றானர். இரண்டாவது முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை பெற்றுள்ளது வங்கதேச அணி.

இந்தியாவிற்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் வங்கதேச போட்டிகள்!

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இந்தியா விளையாடிய 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 10 போட்டிகளில் 8 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணி இந்த 2 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றால் மட்டும் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com