புதிய சாதனையை நோக்கி மூன்று இந்திய வீரர்கள் 

புதிய சாதனையை நோக்கி மூன்று இந்திய வீரர்கள் 

புதிய சாதனையை நோக்கி மூன்று இந்திய வீரர்கள் 
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ் புதிய சாதனை படைக்கவுள்ளனர். 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெரும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும். ஏனென்றால் இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்தால் இந்தியா சார்பில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை 53 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள குல்தீப் யாதவ் 96 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக முகமது ஷமி 56 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் இன்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 27 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் மற்றொரு புதிய சாதனையை படைக்க உள்ளது, அதாவது இவர்கள் இருவரும் ஜோடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடப்பார்கள். இது ஒரு புதிய சாதனையாக அமையும், 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com