இங்கிலாந்து தொடரில் கலக்குவார் குல்தீப்: ஆஸி. சைனாமேன் கணிப்பு!

இங்கிலாந்து தொடரில் கலக்குவார் குல்தீப்: ஆஸி. சைனாமேன் கணிப்பு!

இங்கிலாந்து தொடரில் கலக்குவார் குல்தீப்: ஆஸி. சைனாமேன் கணிப்பு!
Published on

இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் கலக்குவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ’சைனாமேன்’ வகை, சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் போட்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கூறும்போது, ’இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் சாதிக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ’குல்தீப், பேட்ஸ்மேன் கணிப்பதற்குள் பந்தை வேகமாக வீசுகிறார். அவரது ஆக்‌ஷனை இன்னும் கொஞ்சம் மெரு கேற்ற வேண்டும். லெக்ஸ்பின்னில் பந்து இன்னும் கொஞ்சம் மேல் எழுவது போல வீச வேண்டும். வீசினால் அவரால் இன்னும் சாதிக்க முடியும். சேஹலுக்கும் குல்தீப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால், குல்தீப் பந்தை வேகமாகத் திருப்பி வீசுகிறார். சேஹல் பந்தைத் திருப்பு வதில்லை. அது அவரது பலவீனம். இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் மிரட்டுவார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசினால் தடுமாறுவார்கள். அவர்கள் சுழல் பந்துவீச்சில், ஸ்வீப் ஷாட் ஆடத் தான் முயற்சிப்பார்கள். அவர்களை குல்தீப் சரியாக கையாள்வார்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com