சேஹல், குல்தீப் சுழல்: புகழ்கிறார் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்!

சேஹல், குல்தீப் சுழல்: புகழ்கிறார் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்!
சேஹல், குல்தீப் சுழல்: புகழ்கிறார் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்!

சேஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் எழுச்சி விளையாட்டுக்கு சிறப்பானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுணட்ருமான முகமது ஹபீஸ் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, 'சுழல் பந்துவீச்சாளர்கள் எப்போதும் சிறப்பாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணியில் முக்கியமானவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் அனில் கும்ளே, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், பாகிஸ்தான் முஷ்டாக் அகமது ஆகியோர் பல போட்டிகளை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இப்போது சேஹல், குல்தீப் இருவரும் அருமையாகப் பந்துவீசுகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு இவர்கள் பங்கு முக்கியமானது. ஆசியாவுக்கு வெளியே போட்டியை வெல்வது முக்கியம். அதில் இவர்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் சதாப் கானும் சிறப்பாகப் பந்துவீசுகிறார். 19 வயதுதான அவருக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் சர்ப்ஃராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது’ என்றார். 

பாகிஸ்தான் அணிக்காக 50 டெஸ்ட், 200 ஒரு நாள் போட்டி, 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹபீஸ், இப்போதும் அணியின் முக்கிய வீரராக உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com