பாராலிம்பிக் பேட்மிண்டன்: தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்

பாராலிம்பிக் பேட்மிண்டன்: தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்
பாராலிம்பிக் பேட்மிண்டன்: தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் பேட்மிண்டனில் தங்கம் வென்றார் இந்தியாவின் கிருஷ்ணா நாகர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் மற்றும் ஹாங்காங்கின் மன் காய் சூ மோதினர். இதில் 2-1 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்கப பதக்கத்தை கைப்பற்றினார். இதனையடுத்து பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5 ஆவது தங்கத்தை பெற்றுத் தந்தார் கிருஷ்ணா நாகர். இதுவரை பாரலிம்பிக்கில் இந்தியா 19 பதக்கங்களை வென்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com