ஆசிஷ் நெஹ்ரா பங்கேற்கும் கடைசி டி20 ஆட்டம்

ஆசிஷ் நெஹ்ரா பங்கேற்கும் கடைசி டி20 ஆட்டம்

ஆசிஷ் நெஹ்ரா பங்கேற்கும் கடைசி டி20 ஆட்டம்
Published on

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இத்தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சா‌ளர் ஆஷிஷ் நெஹ்ரா இன்று நடைபெறும் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறவுள்ளார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் வகையில் இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com