கொல்கத்தாவிடம் பஞ்சாப் சரண்டர்: இது 8 வது முறையாமே!

கொல்கத்தாவிடம் பஞ்சாப் சரண்டர்: இது 8 வது முறையாமே!

கொல்கத்தாவிடம் பஞ்சாப் சரண்டர்: இது 8 வது முறையாமே!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

பத்தாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் பந்து வீசுவதாக

அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி அம்லாவையும், வோராவையும் முதலில் களம் இறக்கியது. இருவரும் இணைந்து 5.1 ஓவர்களில்

53 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். பின்னர், வோரா 28 ரன்களில் கிளீன் போல்டு ஆக, அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 9 ரன்களில் திரும்பினார்.

அடுத்து வந்த கேப்டன் மேக்ஸ்வெல் மட்டையை சுழற்ற பஞ்சாப் 10 ஓவர்களில் 95 ரன்களை எட்டியது. பிறகு உமேஷ் வேகத்தில் மேக்ஸ்வெல்லும் (25 ரன்),

கிராண்ட்ஹோமி பந்தில் அம்லாவும் (25 ரன்) நடையை கட்ட, அடுத்து வந்த டேவிட் மில்லர், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஜோடி தங்கள் பங்குக்கு 57

ரன்கள் திரட்டியது.

உமேஷ் யாதவின் ஒரே ஒவரில் மில்லர் (28 ரன்), சஹா (25), அக்‌ஷர் பட்டேல் (0) என காலியானார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பஞ்சாப் 170 ரன்கள்

சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில், சுழல் புயல் சுனில் நரேன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிறார், கம்பீருடன். கம்பீரின் 33வது அரைசதத்தோடு

அந்த அணி எளிதில் வென்றது. கம்பீர் 72 ரன்களுடனும் (49 பந்து, 11 பவுண்டரி), மனிஷ் பாண்டே 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தாவுக்கு இது

2–வது வெற்றி. பஞ்சாப் அணி சந்தித்த முதல் தோல்வி. கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி தொடர்ச்சியாக சந்தித்த 8வது தோல்வி இது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com