விளையாட்டு
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : மும்பை முதல் பேட்டிங்
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : மும்பை முதல் பேட்டிங்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்றது.
ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்துள்ளது.
முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றதால் இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அதேசமயம் முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் தொடரை தொடங்கும் எண்ணத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.