மும்பை அணியுடனான மோதல் எப்படியிருக்கும் ? : தினேஷ் கார்த்திக் பதில்

மும்பை அணியுடனான மோதல் எப்படியிருக்கும் ? : தினேஷ் கார்த்திக் பதில்

மும்பை அணியுடனான மோதல் எப்படியிருக்கும் ? : தினேஷ் கார்த்திக் பதில்
Published on

மும்பை இந்தியன்ஸ் மிகவும் வலிமையான அணி எனவும், இன்றைய ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றதால் இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அதேசமயம் முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் தொடரை தொடங்கும் எண்ணத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியுடனான லீக் போட்டி குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், “தொடக்கத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவது சிறப்பானது. அவர்கள் மிகவும் கடினமானவர்கள். எனவே நாங்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் புது வருடம் தான். மோதிக்கொள்ளும் இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு போட்டியும் புது தொடக்கம் தான். எங்கள் இருவருக்கும் இடையிலான மோதல் ஒரு சிறந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கிறேன். மும்பை மிகவும் வலிமையான அணி, எனவே இரண்டு நல்ல அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி இது. எங்கள் அணி எப்போதும்போல தயாராகியிருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com