டாஸ் வென்று கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு!- டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர்

டாஸ் வென்று கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு!- டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர்
டாஸ் வென்று கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு!- டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர்

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். கடந்த சில சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இப்போது அதே அணிக்கு எதிராக ஆடவிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு துவங்கும் 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 28 போட்டிகளில் கொல்கத்தா 16 போட்டிகளிலும், டெல்லி அணி 12 போட்டிகளிலும் வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி நல்ல ஃபார்மில் இருந்தாலும் கடந்த முறை பேட்டிங்கில் தடுமாறியதை மறுக்க முடியாது. கொல்கத்தா பேட்ஸ்மேன்களில் ஒரு சிலர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். தொடக்க வீரராக களமிறங்கும் ரஹானேவும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

மும்பைக்கு எதிராக வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதன் பிறகு குஜராத், லக்னோவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. குறிப்பாக லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் 150 ரன்களை கூட விரட்ட முடியாமல் போனது. டெல்லி அணி பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிகின்றது. இதனால் வார்னர், ரிஷப் பண்ட், பொவேல் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே அணியில் வெற்றி பெற முடியும்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரோ ரஸ்ல், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், ரஷிக் சலாம், வருண் சக்ரவர்த்தி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, ரஹ்மான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com