டாஸ் ட்ரெண்டிங்கை மாற்றிய பாண்ட்யா - கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஸல்

டாஸ் ட்ரெண்டிங்கை மாற்றிய பாண்ட்யா - கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஸல்
டாஸ் ட்ரெண்டிங்கை மாற்றிய பாண்ட்யா - கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஸல்

35-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, 157 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி, கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 34 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில், 35-வது லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில், நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி, இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக முதன்முறையாக பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.

நடப்பாண்டில் இதுவரை நடந்த 34 லீக் போட்களிலும், டாஸ் வெல்லும் அணி, வெற்றிதோல்வியை பற்றி கவலைப்படாமல் கண்ணை மூடிக்கொண்டு முதலில் பவுலிங்கையே தேர்வு செய்து, எதிர் அணியை பேட்டிங் செய்ய பணிக்கும். இதனால் சேசிங்கில் ஈடுபடும் அணி வெற்றிவாய்ப்பை உறுதி செய்யும் என கேப்டன்கள் நினைப்பது உண்டு. ஆனால் முதல் முறையாக குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, அந்த ட்ரெண்டிங்கை மாற்றி பேட்டிங்கை தேர்வு செய்ததையடுத்து அந்த அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி, சன்ரைசர்ஸ் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்து நேற்றுவரை புள்ளிப்பட்டியில் முதல் இடத்தில் இருந்தது. வலுவான அணியாகக் கருதப்படும் அந்த அணி வீரர்கள் இன்றையப் போட்டியில் சொதப்பினர். துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்டாக, விருத்திமான சாஹா 25 ரன்களில் அவுட்டானார். 3 வீரர்கள் டக் அவுட்டானர். அபினவ் மனோகர் 2 ரன்களிலும், ஜோசப் ஒரு ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே நிதானமாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதேபோல் டேவிட் மில்லரும் 27 ரன்கள் சேர்த்தார்.

19-வது ஓவரில் மட்டும் அந்த அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த 4 விக்கெட்டுகளையும் ஆண்ட்ரூ ரஸலே எடுத்தார். டிம் சௌதி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சாம் பில்லிங்ஸ் (4) மற்றும் சுனில் நரேன் (5) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர். 

157 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் கொல்கத்தா அணி 16 ரன் எடுப்பதற்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சாம் பில்லிங்ஸ் 4 ரன்னிலும், சுனில் நரைன் 5 ரன்னிலும் முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நிதிஷ் ராணா 2 ரன்கள் எடுத்த நிலையில், ஃபர்குஷன் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். அத்துடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 12 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கொல்கத்தா அணி 34 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. இதனால், கொல்கத்தா அணிக்கு சற்றே நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெறும் பட்சத்தில்டாஸ் வென்று  துணிச்சலாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததை கெத்தாக சொல்லிக் கொள்ளலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com