4-வது வெற்றிக்கு போராடும் ராஜஸ்தான் - கொல்கத்தா; டாஸ் வென்றது யார்?

4-வது வெற்றிக்கு போராடும் ராஜஸ்தான் - கொல்கத்தா; டாஸ் வென்றது யார்?
4-வது வெற்றிக்கு போராடும் ராஜஸ்தான் - கொல்கத்தா; டாஸ் வென்றது யார்?

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே மைதானங்களில், 2022-ம் ஆண்டுக்கான, 15-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது. 

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி கடைசி போட்டியில் குஜராத்திடம் வீழ்ந்த நிலையில் இன்று வெற்றி பாதைக்கு திரும்ப போராடும்.

இதேபோல், கொல்கத்தா 6 போட்டியில் 3 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. இதனால் 4-வது வெற்றியைப் பெற இரண்டு அணிகளும் கடுமையாகப் போராடும். இதற்கு முன் மோதிய 25 போட்டிகளில் கொல்கத்தா 13, ராஜஸ்தான் 11-ல் வென்றுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆரோன் பிஞ்ச், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:

சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், கருண் நாயர், ஹெட்மயர், ரியான் பராக், ரவிசந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபெட் மெக்காய்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com