கோலிக்கு தென்னாப்பிரிக்க தொடர் ஒரு டெஸ்ட்: பிஷன் சிங் பேடி ஆருடம்!

கோலிக்கு தென்னாப்பிரிக்க தொடர் ஒரு டெஸ்ட்: பிஷன் சிங் பேடி ஆருடம்!

கோலிக்கு தென்னாப்பிரிக்க தொடர் ஒரு டெஸ்ட்: பிஷன் சிங் பேடி ஆருடம்!
Published on

விராத் கோலி, தென்னாப்பிரிக்காவில் தான் உண்மையான சவாலை சந்திக்க இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, ஜனவரி 5-ம் தேதி கேப் டவுனில் நடக்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டி விராத் கோலியின் தலைமைக்கு சவாலானதாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் சுழல் பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறும்போது, ‘விராத் கோலிக்கு இதுதான் சவாலான சுற்றுப்பயணமாக இருக்கும். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தென்னாப்பிரிக்கா தொடர் அவருக்கு கடும் சவாலைக் கொடுக்கும். இது கோலியை பரிசோதிக்கும் தொடராகவும் உண்மையான போட்டியாகவும் இருக்கும்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com