இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் குல்தீப் யாதவ்.
இவர் அறிமுகமான போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது பற்றி கேப்டன் கோலி கூறும்போது, ’குல்தீப் அருமையான பந்துவீச்சாளர். அவரது ‘கிராஸ் சீம்’ பந்து வீச்சு இருபுறமும் நன்றாக சுழலுகிறது. இந்த முறையில் பந்து வீசுவது எளிதானது அல்ல. இத்தகைய பந்து வீச்சை கணித்து ஆடுவதும் சுலபமல்ல. இந்த பந்து வீச்சை, ஐ.பி.எல். போட்டியில் அவரிடம் சந்தித்திருக்கிறேன். அதில் ஆடுவது கஷ்டம். வறண்ட ஆடுகளத்தில் குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொள்வதும் சவால்தான். அவர் தனது முதல் போட்டியிலேயே அபாரமாக பந்து வீசி திறமையை நிரூபித்துள்ளார். மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசக்கூடிய அவர், நமது அணிக்கு கிடைத்தது போனஸ்’ என்றார்.

