‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..!

‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..!

‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..!
Published on

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 

டாஸ் குறித்து விராட் கோலி கூறுகையில், “சேஸ் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் டாஸ் போடுவதற்கு வந்திருக்க தேவையேயில்லை(சிரித்தபடி). டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பீல்டிங் தான் எடுத்திருப்போம். புதிய பந்தினை கொண்டு எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். குல்தீப் மற்றும் சாஹல் தங்களது பங்களிப்பை மிடில் ஆடரில் நன்றாக செய்கிறார்கள். இருப்பினும், இன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் சிறப்பானதாக ஆடுகளம் இருக்கும். உலகக் கோப்பை விரைவில் வரவுள்ளது. அதனால், இங்கு விளையாடுவது மிகவும் முக்கியமானது. இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வானிலை அற்புதமாக உள்ளது” என்றார்.

அதேபோல், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், “இது மிகவும் சிக்கலான ஆடுகளமாக இருக்கலாம். அதிக ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க விரும்புகிறோம். ஆடுகளம் மோசமாக இருக்கும் என்று நம்புகிறோம். குல்தீப் எங்களுக்கு சவாலாக இருப்பார். ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்வது என்பதில் தெளிவாக உள்ளோம். எங்களது பந்துவீச்சாளர்கள் நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், தற்போதும் சிறப்பாக செயல்படுவார்கள்” என்றார்.

முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன் எடுத்து விளையாடி வருகிறது.  குல்தீப் தன்னுடைய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே பெர்ட்ஷா(38) விக்கெட்டை வீழ்த்தினார்.

முன்னதாக இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்தப் போட்டியை வென்று சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com