கடைசி 2 ஒரு நாள் போட்டி, டி20 தொடரில் விராத்துக்கு ரெஸ்ட்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை அடுத்து நியூசிலாந்து சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, நாளை மறுநாள் நடக்கிறது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆடிவருவதால் அவருக்கான பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு இந்த ஓய்வு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.