இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் அடைந்திருப்பதால் விராத் கோலி தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, ஜனவரி 5-ம் தேதி கேப் டவுனில் நடக்கிறது. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முதல் நாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்தார். இந்நிலையில் அவர் முதல் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தவானின் காயத்தால் கேப்டன் விராத் கோலி ஏமாற்றமடைந்துள்ளார். ‘இவ்வளவு பெரிய தொடர் நடக்க இருக்கும் போது கவனமாக இல்லாமல் தவான் காயமடைந்துவிட்டாரே’ என்று கோலி, சக வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தவானுக்குப் பதிலாக முரளி விஜய்யும் கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

