கோலியின் தவறுகளை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை: சேவாக் கருத்து

கோலியின் தவறுகளை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை: சேவாக் கருத்து

கோலியின் தவறுகளை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை: சேவாக் கருத்து
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தவறை சக வீரர்கள் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருப்பதாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக். இவர் இந்திய கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துளார். ஒவ்வொரு அணியிலும் பொதுவாக 4 முதல் 5 வீரர்கள் வரை களத்தில் கேப்டனுக்கு ஆலோசனை வழங்குவர். ஆனால் தற்போது இந்திய அணியில் அதுமாதிரியான சூழலை பார்க்க முடியவில்லை என்று சேவாக்கூறியுள்ளார். விராட் கோலி ஒரு நிலைக்கு வந்துவிட்டார், அவரால் மோசமான சூழ்நிலைகளிலும் நன்றாக விளையாட முடியும். அதனை அவர் மற்ற வீரர்களிடமும் எதிர்பார்க்கிறார். ஆனால் அணியில் உள்ள மற்ற வீரர்கள் கோலியின் நிலையை எட்டவில்லை. இதுதான் கோலியின் தலைமை பாதிக்கிறது. வரும் போட்டிகளில் இதுதொடர்பாக இந்திய அணியினர் அமர்ந்து பேச வேண்டும் என்றும் சேவாக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறும் நோக்கில் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com