விராட் கோலி ஜெர்ஸியில் டேவிட் வார்னரின் மகள் - நெகிழ்ச்சி பதிவு!

விராட் கோலி ஜெர்ஸியில் டேவிட் வார்னரின் மகள் - நெகிழ்ச்சி பதிவு!

விராட் கோலி ஜெர்ஸியில் டேவிட் வார்னரின் மகள் - நெகிழ்ச்சி பதிவு!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் மகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீது அங்கு கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இப்போதும் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் கேள்விக்குறியானது.

ஆனால் இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு பக்கம் டேவிட் வார்னர் ஒரு ஜாலியான பதிவை இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மகளின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் டேவிட் வார்னரின் மகள் விராட் கோலியின் நம்பர் 18 ஜெர்சியை அணிந்துள்ளார். அந்த ஜெர்சியை வார்னர் மகளுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மிக முக்கியமாக வார்னரின் மகள் விராட் கோலியின் ரசிகையும் கூட.

இது குறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டாவில் பதிவிட்ட வார்னர் "இந்திய தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் இந்திய கேப்டன் விராட் கோலி எனது மகளுக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். எனது மகள் இண்டி அந்த பரிசை மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com