சேஹல், குல்தீப் சுழலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் சரண்டர்: இந்தியா ’ஹாட்ரிக்’ வெற்றி

சேஹல், குல்தீப் சுழலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் சரண்டர்: இந்தியா ’ஹாட்ரிக்’ வெற்றி

சேஹல், குல்தீப் சுழலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் சரண்டர்: இந்தியா ’ஹாட்ரிக்’ வெற்றி
Published on

இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அ‌பார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, நேற்று மூன்றாவது போட்டியில் விளையாடியது. கேப்டவுனில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இந்தியாவின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராத் கோலியும், ஷிகர் தவானும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். தவான் 63 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது டுமினி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் களம் இறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராத் கோலி 159 பந்துகளில் 160 ரன்கள் குவித்தார். ஒரு நாள் போட்டியில் இது அவரது 34 வது சதம் ஆகும். 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் சேர்த்தது. 

பின்னர் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 40 ஓவரில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டுமினி மட்டும் நிலைத்து நின்று 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் யுஸ்வேந்திர சேஹல் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.
160 ரன்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் 6 ‌போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com