3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: தமிழக இளம் வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: தமிழக இளம் வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: தமிழக இளம் வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு
Published on

இலங்கையில் நடைபெறும் மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியில், தமிழக இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டி 6-ம் தேதி நடக்கிறது. இதில், இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8-ஆம் தேதி இந்தியா- பங்களாதேஷ், 10 ஆம் தேதி இலங்கை- பங்களாதேஷ், 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ், 16 ஆம் தேதி இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.

இதில் தென்னாப்பிரிக்கத் தொடரில் பங்கேற்ற கேப்டன் விராத் கோலி, விக்கெட் கீப்பர் தோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ஷிகர் தவான் துணை கேப்டன்.

15 பேர் கொண்ட அணி விவரம்:
ரோகித், தவான், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சேஹல், அக்‌ஷர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனட்கட், முகமது சிராஜ், ரிஷப் பன்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com