விராட் கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது

விராட் கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது
விராட் கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது

சர்வதேச அளவில் சாதனைகளை நிகழ்த்திய இந்திய அணியின் கேப்டன் விராட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ சார்பில் விருது வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. 2016-ஆம் ஆண்டில், 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த விராட் கோலிக்கு, சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 2 சதம் அடித்ததுடன், 17 விக்கெட்களைக் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின், “திலிப் சர்தேசாய்” விருதை வென்றார். இதேபோல் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான ரஜிந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் மற்றும் , முன்னாள் மகளிர் அணிக் கேப்டன் சாந்தா ராமசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com